இலங்கையில் நீல நிறத்தில் குழந்தைகள் பிறப்பு!


 இலங்கையில் நீல நிறத்திலான குழந்தைகள் பிறந்திருப்பதாக தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

இவ்விடயத்தை இன்று பாராளுமன்றில் நடைபெற்ற குழுநிலை விவாதத்தில் கமத்தொழில் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

புத்தளம் மாவட்டத்தில் நுரைச்சோலை பகுதிகளிலேயே இவ்வாறு நீல நிறத்திலான குழந்தைகள் பிறந்திருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனை, தாம் நேரில் சென்று பார்வையிட்டபடியினால் சபையில் அதனை தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.

இதற்கு காரணம், யூரியா அதிகமாக பயன்படுத்தியமை மற்றும் இரசாயன உரங்களை பயன்படுத்திமை தான் எனவும் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.