தனிமை மையத்துக்கு சென்ற பஸ் பளையில் விபத்து!


 ஓமானில் இருந்து நாடு திரும்பியவர்களை யாழ்ப்பாணம் – விடத்தற்பளை தனிமை மையத்திற்கு ஏற்றிவந்த சொகுசு பஸ் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து கிளிநொச்சி – பளையில் ஆனைவிழுந்தான் அருகே விபத்துக்குள்ளாகியுள்ளது.

இன்று (27) காலை இடம்பெற்ற இந்த விபத்தில் பஸ் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி நீர் விநியோக குழாய் மீது மோதியுள்ளது.

சம்பவத்தில் 17 காயமடைந்துள்ளதுடன், படுகாயமடைந்த 3 பேர் உடனடியாக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.