காட்டுப்பகுதியில் துப்பாக்கிப் பிரயோகம்
கதிர்காமம் - கட்டகமுவ பகுதிக்கு அருகில் உள்ள காட்டுப்பகுதியில் வேட்டையாடும் நபர்கள் மற்றும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு இடையில் பரஸ்பர துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றுள்ளது.
இந்த துப்பாக்கிப்பிரயோகத்தில் காயமடைந்த வேட்டையாடும் நபர் ஒருவர் கதிர்காமம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
நேற்று (01) இரவு இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கருத்துகள் இல்லை