இருட்டில் அசைந்த கரி உருவத்தோடு மோதிய நபர்!
வீதியால் வீடு நோக்கிச் சென்றுகொண்டிருந்த நபர் ஒருவர் இருட்டில் யானையிடம் அகப்பட்ட சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது.
வவுனியா நெடுங்கேணிப் பகுதியில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் குறித்த நபர் அதிஷ்டவசமாக உயிர் தப்பியதாக பிரதேச மக்களால் கூறப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
நெடுங்கேணி குளவிசுட்டான் பகுதியில் இன்று முன்னிரவு வேளையில் குறித்த நபர் வயல் வேலைகளை முடித்துக்கொண்டு சிறிய ரக மோட்டார் சைக்கிளில் வீடு நோக்கிச் சென்றுகொண்டிருந்துள்ளார்.
இதன்போது ஒழுங்கையின் திருப்பத்தில் சடுதியாக கறுத்த உருவம் ஒன்று அசைந்து சென்றுகொண்டிருந்தது. குறித்த உருவம் ஒரு தனி யானை என்பதை உணர்ந்துகொண்ட குறித்த நபர் வேகக் கட்டுப்பாட்டை இழந்து அந்த யானையின் பின்புறமாக மோதியுள்ளார்.
ஆனாலும் சடுதியாக சுதாரித்த குறித்த நபர் யானையின் பிடியில் சிக்கிக்கொள்ளாது லாவகமாக தப்பியுள்ளார். சற்று தாமதித்திருந்தால்கூட குறித்த யானையின் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கவேண்டி ஏற்பட்டிருக்கும் என்று அவர் பரபரப்போடு கூறியுள்ளார்.

.jpeg
)





கருத்துகள் இல்லை