சூரரை போற்று படத்தின் விமர்சனம்!
சூர்யா நடிப்பில் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் வெளிவர காத்திருக்கும் படம் சூரரை போற்று. சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் இன்று இரவு 12.00 மணிக்கு வெளியாகிறது.
ஆம் திரையரங்கில் வெளியாகும் என எதிர்பார்த்து கொண்டிருந்தோம். ஆனால் சில தவிர்க்க முடியாத காரணத்தினால் இப்படம் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகிறது.
இந்நிலையில் சூரரை போற்று படத்தை குறித்து முதல் விமர்சனம் வெளியாகியுள்ளது. ஆம் இயக்குனர் பாண்டிராஜ், இயக்குனர் கே.வி. ஆனந்த் மற்றும் நடிகர் ஆர்யா ஆகியோர் இப்படத்தை பார்த்திவிட்டு முதல் விமர்சனத்தை கூறியுள்ளனர்.
சூரரை போற்று படத்தின் விமர்சனம் :
பாண்டிராஜ் : இது ஒரு புதிய அனுபவம். சூரரை போற்று படத்தில் உள்ள ஒவ்வொரு கதாபாத்திரமும் எனது மனதை தொடுகிறது. சூர்யாவின் நடிப்பு படத்திற்கு மிகப்பெரிய தூண் . இயக்குனர் சுதா கொங்கராவின் , ஒவ்வொரு ஃபிரேம் பார்க்கும் பொழுது கடின உழைப்பை என்னால் காண முடிகிறது. இசை படத்திற்கு வலு சேர்த்துள்ளது. இது இந்த தீபாவளிக்கு விஷுவல் விருந்தாக இருக்கும்.
கே.வி. ஆனந்த் : ஒரு வெற்றி கதை. சூர்யாவின் நடிப்பு அளவில்லா பாராட்டிற்கு இணையானது. போராட்டம் மற்றும் வெற்றி. அவர் கதாபாத்திரத்தை வாழ்ந்தார்.
நடிகர் ஆர்யா : மாரா கதாபாத்திரத்தில் இருந்து என்னால் என் கண்களை எடுக்க முடியவில்லை. வாழ்க்கையின் வெவ்வேறு கட்டங்களை முழுமையுடன் சித்தரிக்கும் மாராவாக வாழ்ந்தார், ஹாட்ஸ் ஆஃப் யு சார்.
இது தான் சூரரை போற்று படத்தின் முதல் திரைவிமர்சனம்..

.jpeg
)





கருத்துகள் இல்லை