நடுரோட்டில் சிறுமி ஒருவர் அறுத்து கொலை!


 இந்தியாவின் ஆந்திரா மாநிலத்தில் நடுரோட்டில் சிறுமி தொண்டை அறுத்து கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விசாகப்பட்டினம் கஜுவாக்கா பகுதியில் உள்ள சுந்தரயா காலனி, சாய்பாபா கோயில் அருகே இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.

கொல்லப்பட்ட 17 வயது சிறுமி வரலட்சுமி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சாலையில் வரலட்சுமி சென்றுக்கொண்டிருந்த போது வழிமறித்த சுனில் என்ற நபர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

கடும் வாக்குவாதத்தின் பின்னர் கோபமடைந்த சுனில், கூர்மையான முனைகள் கொண்ட ஆயுதத்தால் வரலட்சுமியின் தொண்டையை அறுத்துள்ளான்.

இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த வரலட்சுமி சம்பவயிடத்திலேயே உயிரிழந்தார்.

கைது செய்யப்பட்ட சுனில் தற்போது பொலிஸ் காவலில் உள்ளார். சுனிலின் காதலை வரலட்சுமி நிராகரித்ததால் அவர் கோபமடைந்ததாக இவ்வாறு செய்ததாக பொலிசார் சந்தேகிக்கிறார்கள்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.