1,409 ஐ.எஸ் தீவிரவாதிகள் படுகொலை!
பிரித்தானியா நடத்திய தாக்குதல்களால் 1,409 ஐ.எஸ் தீவிரவாதிகளை கொல்லப்பட்டனர் அல்லது காயமடைந்துள்ளனர் என்று அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளன.
பிரித்தானியாவின் பாதுகாப்பு அமைச்சகத்தின் விமான பதிவுகள் சனிக்கிழமை வெளியிடப்பட்டுள்ளன.
கடந்த ஆறு ஆண்டுகளில் சிரியா மற்றும் ஈராக்கில் பிரித்தானியா ராயல் விமானப்படை நடத்திய ட்ரோன் தாக்குதல்களால் 1,409 ஐ.எஸ் தீவிரவாதிகளை கொல்லப்பட்டனர் அல்லது காயமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த எண்ணிக்கை புகைப்பட சான்றுகள் மற்றும் எஞ்சியிருக்கும் பாகங்களை அடிப்படையாகக் கொண்டது.
இந்த வான்வழித் தாக்குதல்களை பிரித்தானியா ராயல் விமானப்படையின் MQ-9 ரீப்பர் ஆளில்லா வான்வழி விமானங்கள் (UAV-கள்) மேற்கொண்டன.
அவை பிரித்தானியாவை தளமாகக் கொண்ட பதுங்கு குழிகளில் உள்ள குழுவினரால் இயக்கப்பட்டன என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அமைச்சகத்தின் விமானப் பதிவுகள் 2014 முதல் MQ-9 களால் மேற்கொள்ளப்பட்ட குறைந்தது 4,107 தாக்குதல்களை தனித்தனியாக சுட்டிக்காட்டின.
பிரித்தானியா இராணுவம் எப்போதுமே துல்லியமான இலங்குகளை குறிவைப்பதின் மூலம் பொதுமக்கள் உயிரிழப்புகளின் அபாயத்தை குறைக்க முயல்கிறது என பாதுகாப்பு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.
கருத்துகள் இல்லை