தமிழ்நாட்டில் இடம்பெற்ற கமலா ஹாரிசின் வெற்றி கொண்டாட்டம்!


 அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக இந்திய வம்சாவழி பெண்ணான கமலாஹாரிஸ் தெரிவாகியுள்ளதை தமிழ்நாட்டில் உள்ள அவரது பூர்வீககிராமத்தை சேர்ந்தவர்கள் கொண்டாடி வருகின்றனர்..


தமிழ்நாட்டின் திருவாவூரின் துளசேந்திரபுரத்தின் பெண்கள் கமலாஹாரிசினை வாழ்த்துவதற்காக விசேட கோலமொன்றை உருவாக்கியுள்ளனர்.


அதில் எங்கள் கிராமத்தின் கமலா ஹாரிசிற்கு வாழ்த்துக்கள் என்ற செய்தியை அந்த கோலத்தில் காணப்படுவதுடன் வணக்கம் அமெரிக்கா எனவும் துளசேந்திரபுரத்தின் பெண்கள் தங்கள் கோலத்தில் தெரிவித்துள்ளனர்.


இதுதவிர சுவரொட்டிகளை ஒட்டியும் இனிப்புகளை வழங்கியும் துளசேந்திரபுரம் கமலாஹாரிசின் வெற்றியை கொண்டாடியுள்ளனர்.


இந்த வெற்றி தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களுக்கு மாத்திரமில்லை உலகம் எங்கிலும் உள்ள தமிழர்களுக்கும் பெருமைக்குரிய விடயம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.


இதேவேளை தமிழ்நாடு விவசாயதுறை அமைச்சர் காமராஜ் இந்த கிராமத்திற்கு சென்று ஆலயவழிபாட்டினை மேற்கொண்டதுடன், இந்த சிறிய கிராமத்தை சேர்ந்த பெண்ணொருவர் அமெரிக்காவில் மிகவும் முக்கியமான பதவிக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளார் இது மிகவும் பெருமைக்குரிய தருணம் என குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.