மாவீரர்நாள் தடை கோரலுக்கு எதிராக கட்டளை வழங்க யாழ் நீதிமன்று மறுப்பு!


 மாவீரர்நாள் நினைவேந்தல் அனுஷ்டிப்பதை தடை செய்ய நடவடிக்கை எடுக்க கூடாது எனக் கட்டளை வழங்கக் கோரிய மனுக்களை நிராகரித்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் இன்று (20) சற்றுமுன் உத்தரவிட்டுள்ளது.

அவ்வாறு கட்டளை வழங்கும் நியாயாதிக்க அதிகாரம் தமக்கு இல்லை என்று தெரிவித்து இந்த உத்தரவு தீர்ப்பை நீதிபதி அறிவித்துள்ளது.

அத்துடன் மனுதாரர்கள் தனித்தனியாக நினைவேந்தல் செய்வதை எவரும் தடுக்க முடியாது என்பதை மன்று ஏற்பதுடன், கூட்டாக நினைவேந்தல் செய்வது தேசிய பாதுகாப்புடன் தொடர்புடையது என்றும் உத்தரவின் போது மேலும் தெரிவிக்கப்பட்டது.

பயங்கரவாத தடைச் சட்டத்தையோ அல்லது தனிமைப்படுத்தல் சட்ட விதிகளையோ காரணம் காண்பித்து எதிர்வரும் நவம்பர் 25ம் திகதி தொடக்கம் 27ம் திகதிவரை அனுஷ்டிக்கவிருக்கும் நினைவேந்தல் நிகழ்வுகளைத் தடை செய்ய முயற்சிக் கூடாது என்று வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் மற்றும் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோருக்கு கட்டளை வழங்குமாறு கோரி யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் இந்த தலையீட்டு நீதிப் பேராணை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

Blogger இயக்குவது.