மனைவியுடன் கணவனும் தூக்கில் தொங்கினார்!
தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாடிய தம்பதி திடீரென்று வீட்டில் தற்கொலை செய்து கொண்ட கிடந்த சம்பவம் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி கிராப்பட்டி சிம்கோ காலனி 2-வது தெருவை சேர்ந்தவர் மோகன்தாஸ். 70 வயதான இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர்.
இவருக்கு 64 வயதில் சுமதி என்ற மனைவி உள்ளார்.
இந்நிலையில், இந்த தம்பதி நேற்று தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாடியுள்ளனர். குறிப்பாக பட்டாசுகளை வெடித்து கொண்டாடியுள்ளனர்.
விடிய விடிய மகிழ்ச்சியுடன் தீபாவளியை கொண்டாடிவிட்டு வீட்டிற்குள் சென்றுள்ளனர்.
இதையடுத்து, இன்று காலை வெகு நேரம் ஆகியும், அவர்களின் வீடு திறக்கப்படாமல் இருந்ததால், சந்தேகமடைந்த அவரது மகன் பாலாஜி.
கதவை திறந்து பார்க்க முயற்சித்துள்ளார். ஆனால் கதவை திறக்க முடியாததால், இறுதியில் கதவை உடைத்து சென்று பார்த்த போது, மோகன்தாஸ் தூக்கில் தொங்கிய நிலையிலும், அவரது மனைவி சுமதி சடலமாகவும் விழுந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இது குறித்து தகவல் உடனடியாக பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், பொலிசார் விரைந்து வந்து உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்து, வீட்டை சோதனை செய்துள்ளனர்.
அப்போது அங்கு கடிதம் ஒன்று இருந்துள்ளது. அதில், தங்களது தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை. எங்களுக்கு வாழவே பிடிக்கவில்லை.
எங்களுடைய மகன், மருமகள், பேத்தியை விட்டு செல்வததற்குதான் கஷ்டமாக இருக்கிறது. அவர்கள் எங்களை காப்பாற்ற நிறைய செலவு செய்தார்கள் என்று குறிப்பிட்டுள்ளனர்.
அதன் பின் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், சுமதிக்கு புற்று நோய் இருந்துள்ளது. இதனால் பல நாட்களாகவே சுமதி கடும் அவதிக்குள்ளாகியுள்ளார்.
அவர் படும் வேதனையை சகிக்க முடியாமல், மோகன்தாஸ் தற்கொலை செய்ய முடிவு செய்துள்ளார். ஆனால், இறுதியில் இருவருமே தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

.jpeg
)





கருத்துகள் இல்லை