மரத்தில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு!
திருகோணமலை – சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மரத்தில் தொங்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலமொன்று நேற்றிரவு (14) மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மீட்கப்பட்டவர் மூதூர்- சம்பூர்-03 பகுதியைச் சேர்ந்த யோகைய்யா நித்தியன் (34 வயது) என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திருமணமாகி 3 மாதங்கள் ஆகிய நிலையில் சம்பூர் பிரதேசத்தில் உள்ள குளத்துக்கு அருகில் உள்ள மரம் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இறப்பு குறித்து பொலிசார் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள் இல்லை