மாமனிதர் ரவிராஜ் நினைவேந்தல் அனுஷ்டிப்பு!


 சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் “மாமனிதர்” நடராஜா ரவிராஜ் அவர்களின் 14ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (10) சாவகச்சேரியில் இடம்பெற்றது.

மாமனிதர் ரவிராஜின் உருவச் சிலை அமைந்துள்ள சாவகச்சேரி பிரதேச செயலகத்திற்கு முன்னால் குறித்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது. அன்னாரின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டதோடு நினைவுச் சுடர் ஏற்றப்பட்டு மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

குறித்த நினைவேந்தல் நிகழ்வினை சுமந்திரன் எம்பி அணியினர் காலை 9 மணிக்கும் நடராஜா ரவிராஜ் மனைவி சசிகலா ரவிராஜ் தலைமையிலான அணியினர் 9.30 மணிக்கும் நினைவேந்தல் நிகழ்வினை நடத்தியிருந்தனர்.

ஏட்டிக்குப் போட்டியாக குறித்த நிகழ்வுகள் ஒன்றன்பின் ஒன்றாக நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.