உடல்களை தகனம் செய்வதில் மாற்றமில்லை!


 கொரோன வைரஸால் இறந்தவர்களின் உடல்களை தகனம் செய்யும் முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்று சகாதார அமைச்சின் பேச்சாளர் ஜயருவான் பண்டார தெரிவித்துள்ளார்.

கொரோனாவால் இறக்கும் முஸ்லிம்களின் உடல்களை புதைப்பதற்கான வறண்ட நிலத்தை ஒதுக்கும் சாத்தியம் பற்றியும், ஏனைய நாடுகளை போன்று உடல்களை அடக்கம் செய்வதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பிலும் ஆராயுமாறு நேற்று (09) சுகாதார அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல் வழங்கியிருந்தார்.

இதேவேளை ஜனாதிபதியின் அறிவுறுத்தலை மேற்கோள்காட்டி முஸ்லிம்களின் உடலை புதைக்க அமைச்சரவை அனுமதி வழங்கியதாக தகவல்கள் பரப்பப்படுகின்ற நிலையிலேயே ஜயருவான் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.