கொரோனா தடுப்பூசி - வெளிவந்துள்ள மகிழ்ச்சியான தகவல்
பைசர் நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசி பக்க விளைவுகள் இல்லாத மிகவும் திறனுடன் செயல்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் பல்வேறு நாடுகளும் கொரோனா தடுப்பூசி ஆய்வில் ஈடுபட்டு வருகின்றன. மனிதர்கள் மீது பல கட்டப் பரிசோதனைகள் நடத்தி அதன் முடிவுகளுக்காக காத்திருக்கின்றன.
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்றால் மருத்துவமனைகள் நிரம்பி வருகின்றன. அவசர சிகிச்சை மையங்களும் முழுவதுமாக ஆக்கிரமிக்கப்பட்டு படுக்கை வசதிகளின்றி நெருக்கடியான சூழலில் உள்ளன. மறுபுறம் பலி எண்ணிக்கையை கட்டுப்படுத்தவே முடியவில்லை.
இந்நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த பைசர் மற்றும் பயோ-என்-டெக் ஆகிய நிறுவனங்கள் கூட்டாக தயாரித்த கொரோனா தடுப்பூசி பரிசோதனைகள் மூன்றாம் கட்டத்தை எட்டியுள்ளன.
கருத்துகள் இல்லை