’இது மிகவும் நல்ல செய்தி’ - டொனால்ட் ட்ரம்ப் திடீர் டுவிட்
கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பு தொடர்பில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
‘பங்குச்சந்தை மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளது, தடுப்பூசி மிக விரைவில் வந்துகொண்டிருக்கிறது. தடுப்பூசி 90 சதவீதம் பலனளிக்கிறது. இது மிகவும் நல்ல செய்தி’ என தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் பைசர் மருந்து நிறுவனமும் ஜெர்மனியின் பயோஎன்டெக் மருந்து நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியின் இறுதி கட்ட ஆய்வு முடிவுகளின் முதல் பகுதி நேற்று வெளியானது.
கருத்துகள் இல்லை