ரயில்வே திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!
புகையிரதங்களில் மேல் மாகாணத்திலிருந்து வெளியேற அனுமதி வழங்கப்படாது என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
நேற்று இரவு முதல் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை புகை யிரதங்களில் மேல் மாகாணத்திற்குள் பிரவேசிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள போதும், மேல் மாகாணத்திலிருந்து வெளியேற அனுமதி வழங்கப்படவில்லை என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், பெலியத்த, கண்டி, மஹாவ,புத்தளம், அவிசாவெல்ல ஆகிய புகையிர நிலையங்களிலிருந்து புறப்படும் புகையிரதங்கள் இன்று காலை கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்குச் செல்ல அனுமதிக்கப்படும் என்றும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன், பிற்பகலில் புகையிரதங்களில் பயணிக்கும் பயணிகளுக்கு மேல் மாகாணத்தினுள் அமைந்துள்ள இறுதி ரயில் நிலையமான அழுத்கம, அம்பேபுஸ்ஸ, கொச்சிகடே, அவிசாவளை வரை கொழும்பிலிருந்து பய ணிக்க அனுமதி உள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது
சுகாதார நடவடிக்கை காரணமாக இடையில் பணிகளை ஏற்ற முடியாத சூழ்நிலை காணப்படுகின்றது.
இந்நிலையில், குறித்த பகுதிகளைத் தாண்டி சென்ற பிறகு பணிகளை ஏற்றிச் செல்லப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏனைய பிரதேசங்களில் வழமையான நேர அட்ட வணையின் பிரகாரம் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

.jpeg
)





கருத்துகள் இல்லை