காரை ஓட்டிச் சென்றவர் வீதியில் திடீர் மரணம்!


 மல்வானை – பியகம வீதியில் காரொன்றை செலுத்திச் சென்ற 64 வயதுடைய நபரொருவர் காருக்குள்ளேயே மரணமடைந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்றதாக பியகம பொலிஸாபொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த நபர் தொம்பே கிம்புல்விலவத்த பிரதேசத்திலுள்ள தனது வீட்டிலிருந்து மனைவி மற்றும் சித்தியை அழைக்கச் சென்றுகொண்டிருக்கும் போது இச்சம்பவம் இடம்பெறுள்ளது.

அவர் திடீரென சுகயீனமுற்றதையடுத்து காரை வீதியோரத்தில் நிறுத்திய பின்னர் மரணமடைந்துள்ளதாக பொலிஸ் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

தொம்பே கிம்புல்விலவத்த பிரதேசத்தைச் சேர்ந்த வீ. சீ .டி ரஸல் கிரிஸ்டோபர் அல்விஸ் மரணமடைந்த நபர் சுகயீனமுற்று சிகிச்சை பெற்றுவந்துள்ளதால் பீ.சீ.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் கூறினர்.

இவரது மரணம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.