கொரோனா செயற்பாட்டுக்கு குழு!


 தற்போதுள்ள கொரோனா தொற்று நிலைமையினை தவிர்ப்பதற்கு ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள கிராம, பிரதேச மட்ட குழுக்களை வினை திறனாக செயற்படுத்த இன்றைய வடக்கு மாகாண கொரோனா செயலணி கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது என்று யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்தார்.

குறித்த கூட்டம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும்,

“அத்தியாவசிய உணவு பொருட்களின் இருப்பு, அந்த உணவு பொருட்களுக்கான போக்குவரத்து விநியோகம் மற்றும் டெங்கு கட்டுப்படுத்தல் நிலவரங்கள் அதேபோன்று எதிர்வரும் மழைகாலத்தில் மாவட்ட ரீதியாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் விரிவாக ஆராயப்பட்டது. விவசாயம் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளை மேம்படுத்தும் போது உள்ள இடர்பாடுகள் தொடர்பிலும் ஆராயப்பட்டது.

யாழ் மாவட்டத்தில் 800 குடும்பங்கள் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். யாழில் தொற்று கண்டறியப்பட்டோரின் எண்ணிக்கை 16″ – என்றார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.