மந்திரவாதியின் ஆலோசனையில் சுகாதார அமைச்சர்!


 நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைகையில்  'மந்திரவாதி மருத்துவரின்' ஆலோசனைக்கு அமைவாக செயற்படும் சுகாதார அமைச்சரின் நடவடிக்கைகளால் சர்வதேசத்தின் மத்தியில் எமது நாடு நகைப்பிற்குரியதாக மாறியிருக்கிறது என்று முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர சாடியிருக்கிறார்.

கொரோனா வைரஸ் பரவலில் இருந்து மீட்சி பெறுவதற்காக மதவழிபாட்டில் ஈடுபடுமாறு பிரதமர் மகிந்த ராஜபக்ச மதத்தலைவர்களிடம் கேட்டுக்கொண்டிருந்தார். 

அதனைத்தொடர்ந்து வைரஸ் பரவலை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியும் மேலும் சிலரும் மதரீதியான சடங்கில் ஈடுபடும் புகைப்படங்கள் நேற்று முன்தினம் சமூகவலைத்தளங்களில் வெளியாகின.



இதனை அடிப்படையாகக்கொண்டு தனது டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவொன்றிலேயே மங்கள சமரவீர மேற்கண்டவாறு குறிப்பிட்டிருக்கிறார். அதில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:


நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்து வருகையில் மோசமான 'மந்திரவாதி மருத்துவரின்' ஆலோசனைக்கு அமைவாக சுகாதார அமைச்சர் செயற்பட்டுக்கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் விஞ்ஞானத்தை நம்புகின்ற பகுத்தறிவுள்ள ஒரு மனிதரான ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, சர்வதேசத்தின் மத்தியில் எமது நாட்டை நகைப்பிற்குரியதாக மாற்றும் வகையிலான தனது அமைச்சர்களின் செயற்பாடுகளைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.