குழுநிலை விவாதத்தின் நான்காம் நாள் விவாதம் இன்று!
இலங்கையின் 75ஆவது வரவு- செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதத்தின் நான்காம் நாள் விவாதம் இன்று (வியாழக்கிழமை) இடம்பெறவுள்ளது.
விவசாயம் மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சுக்களின் நிதி ஒதுக்கீடுகள் தொடர்பாக இன்றையதினம் விவாதிக்கப்படவுள்ளது.
அத்தோடு பெருந்தெருக்கள் இராஜாங்க அமைச்சு உட்பட 6 இராஜாங்க அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் குறித்தும் இன்றைய தினம் விவாதிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நிதி அமைச்சர் மஹிந்த ராஜபக்ஷவினால் கடந்த 17ஆம் திகதி 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட யோசனை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.
அதன் பின்னர் 4 நாட்களுக்கு வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இடம்பெற்றது.
அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற 2ஆம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில், வரவு செலவுத் திட்டம் 99 மேலதிக வாக்குகளால் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டது.
அதேநேரம், வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான குழுநிலை விவாதத்தின் இறுதி நாளான 10ஆம் திகதியன்று, அதன் மீதான வாக்கெடுப்பும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை