காரைநகர் முடக்கும் தீர்மானம் இதுவரையில்லை!


 “காரைநகர் பிரதேச செயலக பிரிவை தனிமைப்படுத்தும் தீர்மானம் இன்று காலை வரை எடுக்கப்படவில்லை. கொரோனா தொற்று உள்ளவருடன் தொடர்புடையவர்களை சுகாதாரத் துறையினர் தேடி வருகின்றனர். இன்று மாலை அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்”

இவ்வாறு யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் க.மகேசன் தெரிவித்தார். மேலும்,

“காரைநகர் பிரதேசத்தில் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் பிரதேச சுகாதாரத் துறையினர் ஈடுபட்டுள்ளனர். இதனால் கொரோனா தொற்று உள்ளதாக அடையாளம் காணப்பட்டவருடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் கண்டறியப்பட்டு சுயதனிமைப்படுத்தப்படுகின்றனர்.

சுகாதாரத் துறையினரின் கள நிலமைகளை ஆராய்ந்து இன்று மாலை அடுத்த கட்ட நவடிக்கை எடுக்கப்படும்” என்றும் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.