இராமேஸ்வரம் கடலில் மெழுவர்த்தி ஏந்தி அஞ்சலி!


 தமிழகம் – இராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரை அருகில் இலங்கையில் தமிழீழ விடுதலை போரில் தம் உயிரை தியாகம் செய்த மாவீரர்களின் மாவீரர் தினத்தை முன்னிட்டு நேற்று (27) நாம் தமிழர் கட்சியினர் திரளாக கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.

இரவு 7 மணிக்கு பாடல் இசைக்கப்பட்டு கண்ணீர் மல்க மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.

நிகழ்வில் இராமநாதபுரம், திருப்புல்லாணி, திருவாடனை, முதுகுளத்தூர், கடலாடி, ஆர்எஸ் மங்கலம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள நாம் தமிழர் கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் பல் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.