முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறார் பொரிஸ் ஜோன்ஸன்!


 இங்கிலாந்து முழுவதுமாக எதிர்வரும் 2030ம் ஆண்டிற்குள் பெற்றோல் மற்றும் டீசல் கார்களை தடைசெய்ய இங்கிலாந்து அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இங்கிலாந்தில் 2040 ஆம் ஆண்டில் பெற்றோல் டீசல்,கார்களை முழுவதுமாக தடை செய்வது என்று திட்டமிடப்பட்டிருந்தது.

அந்தத் திட்டத்தை முன்கூட்டியே 2035 ஆம் ஆண்டில் இருந்து தடை செய்ய இங்கிலாந்து பிரதமர் பொரிஸ் ஜோன்சன் முடிவு செய்தார். இப்போது அந்த முடிவை இன்னும் முன்கூட்டியே அவர் செய்ய திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

அதன்படி அடுத்தவாரம் 2030ம் ஆண்டிற்குள் பெற்றோல், டீசல் கார்களை இங்கிலாந்தில் முழுவதுமாக தடைசெய்வது என்ற அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்தில் எரிசக்தி மதிப்பீட்டின் ஒரு பகுதியாக மின்சார கார் சந்தையை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை பிரதமர் பொரிஸ் ஜோன்சன் மேற்கொள்வார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்பொழுது விற்பனையாகும் கார்கள் 73.6 சதவீதம் பெற்றோல், டீசல் கார்களாக உள்ளன. 5.5% கார்கள் மட்டுமே மின்சார கார்கள் ஆக உள்ளன. மின்சார கார்களின் விலை மிகவும் அதிகம் என்று தொழில் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Blogger இயக்குவது.