கொழும்பில் 66 இந்தியர்களுக்கு கொரோனா!

 


இலங்கையின் தலைநகர் கொழும்பில் உள்ள ஒரு கட்டுமானத் தளத்தில் பணியாற்றும் 66 இந்திய பிரஜைகளுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில்கொரோனா தொற்று இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக ஹிந்துஸ்தான் ரைம்ஸ் தெகவல் வெளியிட்டுள்ளது.

இவ்வாறு கொரோனா தொற்றுக்கு இலக்கான அவர்கள் வடக்கு கொழும்பு பகுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்,

அவர்கள் பேலியகொட மீன் சந்தை கொரோனா கொத்தணி தவிர பெருமளவில் தொற்றுக்குள்ளானநிலையில் அடையாளம் காணப்பட்டவர்களாக உள்ளதாக கொழும்பு மாநகரசபை தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் ருவான் விஜேமுனி பி.டி.ஐ யிடம் தெரிவித்தார்.

இவர்களுக்கு எழுந்தமானமாக சோதனை நடத்தப்பட்டுள்ளது.முதல் 19 பேரைத் தொடர்ந்து பின்னர் 47 பேர் என சோதனை நடத்தப்பட்டதாக மருத்துவர் விஜேமுனி கூறினார்.

அவர்கள் அனைவரும் தர்கா நகரில் உள்ள இடைக்கால சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என அவர் மேலும் தெரிவித்தார்.


Blogger இயக்குவது.