பெண் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகை!
கர்ப்பமாக உள்ள அல்லது 2 வயதிற்குட்பட்ட குழந்தைகளைக் கொண்ட பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் முன்னறிவிப்பு இன்றி வீட்டில் தங்குவதற்கு அனுமதிக்க பதில் பொலிஸ் மா அதிபர் தீர்மானித்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர், பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோகண தெரிவித்தார்.
இது தொடர்பாக பொலிஸ் பொறுப்பதிகாரிகளுக்கு சிறப்பு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது..
அதன்படி,மேற்கு மாகாணத்தில் வசிக்கும் 2 வயதிற்குட்பட்ட குழந்தைகளுடன் உள்ள பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் கர்ப்பிணி பொலிஸ் உத்தியோகத்தர்கள் எந்த பொலிஸ் நிலையம் அல்லது அலுவலகத்துடன் இணைக்கப்பட்டிருந்தாலும் அல்லது தனிமைப்படுத்தப்பட்ட மற்றொரு பகுதியில் வசித்தாலும் மேற்படி நடைமுறையை பின்பற்றலாம்.
அவர்கள் கடமைக்காக பொலிஸ் நிலையத்தில் முன்னறிவிப்பு செய்யத் தேவையில்லை.அவர்கள் வீட்டிலேயே தங்கலாம்.
கருத்துகள் இல்லை