கொழும்பிலேயே அதிகமான தொற்றாளர்கள் அடையாளம்!
நேற்றையதினம் அடையாளம் காணப்பட்ட 387 கொவிட்19 நோயாளர்களுள், 231 பேர் கொழும்பு மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
42 பேர் கம்பஹாவிலும், 20 பேர் களுத்துறையிலும், 11 பேர் குருணாகலையிலும், 2 பேர் காலியிலும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தொற்றுநோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
அதேநேரம், ஒக்டோபர் மாதம் 4ம் திகதிக்குப் பின்னர் கொழும்பு மாவட்டத்தில் இதுவரையில் 5 ஆயிரத்து 899 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.
கம்பஹா மாவட்டத்தில் 4 ஆயிரத்து 998 பேருக்கு கொவிட் தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.
களுத்துறையில் 618 பேரும், இரத்தினபுரியில் 112 பேருக்கும், காலி 128 பேருக்கும், கேகாலையில் 186 பேருக்கும், மொனராகலையில் 9 பேருக்கும், குருணாகலையில் 250 பேருக்கும் யாழ்ப்பாணத்தில் 20 பேருக்கும், நுவரெலியாவில் 48 பேருக்கும் கொவிட் 19 தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.
அதேநேரம், அனுராதபுரத்தில் 14 பேருக்கும், கிளிநொச்சியில் 3 பேருக்கும், மாத்தளையில் 29 பேருக்கும், கண்டியில் 137 பேருக்கும், மன்னாரில் 10 பேருக்கும், வவுனியாவில் 14 பேருக்கும், அம்பாறையில் 22 பேருக்கும் கொவிட் 19 தொற்றுறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை