உயிரிழந்தவரின் உடல் அகற்றப்படாத அவலம்!


 கஹவத்த, கெதெதென்ன பிரதேசத்தில் ஒருவர் திடீரென நிலத்தில் விழுந்து உயிரிழந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கொரோனா அபாய வலயமான பேலியகொடவிலிருந்து, அந்த பகுதியிலுள்ள உறவினர் வீட்டுக்கு வந்த நபரே இவ்வாறு உயிரிழந்தார்.

கொரோனா அபாய வலயத்திலிருந்த வந்தவர் என்பதால், அவரது உடலை யாரும் நெருங்கவில்லை. சுமார் 8 மணித்தியாலங்கள் வரை அவரது உடல் அகற்றப்படாமல், வீட்டின் முன்பாகவே காணப்பட்டது.

உயிரிழந்தவர் 66 வயதுடையவர். சற்று உயரமான பகுதியில் அவர் உயிரிழந்தார். உடலை அகற்ற பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாததால், உடல் நீண்டநேரமாக வீட்டின் முன்பகுதியில் இருக்க வேண்டியேற்பட்டதாக கஹவத்த பொலிசார் தெரிவித்தனர்.

நேற்று மாலை 3.30 மணியளவில் அவர் உயிரிழந்தார். இன்று அதிகாலை 12.20 மணியளவிலேயே உடலை அகற்ற முடிந்தது.

உயிரிழந்தவரின் உடலை அகற்ற பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாததால், 4 பொலிசார் அந்த பகுதியில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டு, வீதியின் 500 மீற்றர் பகுதி தடை செய்யப்பட்டிருந்தது.

உயிரிழந்தவர் கடந்த 16ஆம் திகதி கஹவத்தவிலுள்ள தனது சகோதரி வீட்டிற்கு வந்திருந்தார்.

கொரோனா அபாய வலயத்திலிருந்து அவர் வந்திருந்ததால், கொரோனா தொற்றினால் அவர் இறந்திருக்கலாமென்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பிசிஆர் பரிசோதனைக்காக இன்று காலை இரத்தினபுரி பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

அவர் திடீரென நோய்வாய்ப்பட்ட போது, வீட்டிற்கு வந்த அயலவர்களின் நான்கு வீடுகள், கெதென்னவில் இரண்டு கடைகள் மற்றும் ஒரு முச்சக்கர வண்டி ஓட்டுநர் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக சப்ரகமுவ மாகாண சுகாதார சேவைகள் இயக்குநர் அலுவலக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.