பங்களாதேஷ் கிரிக்கெட் வீரருக்கு கொரோனா தொற்று!


 பங்களாதேஷ் இருபதுக்கு - 20 கிரிக்கெட் அணித் தலைவர் மஹ்முதுல்லா ரியாத் கொரோனா தொற்றுக்குளளாகியுள்ளார்.

இன்று ஞாயிற்றுக்கிழமை பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகளில் கலந்து கொள்வதற்காக பாகிஸ்தானுக்கு புறப்படவிருந்த நிலையிலேயே அவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந் நிலையில் பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகளை தவறவிடுமும் மஹ்முதுல்லா தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்.

பங்களாதேஷ் அரசாங்கத்தின் வழிகாட்டுதல்களின் படி, வெளிநாடுகளுக்குச் செல்லும் எந்தவொரு தனிநபரும் கட்டாயமாக கொவிட் - 19 சோதனை செய்யப்பட வேண்டும். 

இந் நிலையில் இன்று காலை 10 மணிக்கு துபாய் வழியாக பாகிஸ்தானுக்கு செல்ல திட்டமிடப்பட்ட மஹ்முதுல்லா, நாட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்பு மேற்கொண்ட சோதனையின் போதே கொரோனா தொற்றுக்குள்ளாகியமை கண்டறியப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.