இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலக ஊழியருக்கு கொரோனா!
கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் ஊழியர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
கருத்துகள் இல்லை