வென்றது யாழ்ப்பாணம்!


 லங்கா பிரீமியர் லீக் (எல்பிஎல்) தொடரின் இரண்டாவது போட்டியில் இன்று (27) காலி க்ளாடியேடர்ஸ் – யாழ்ப்பாணம் ஸ்ராலியன்ஸ் அணிகள் மோதிக்கொண்டன.

இந்த போட்டியில் யாழ்ப்பாணம் 8 விக்கெட்களினால் அபார வெற்றி பெற்றது.

போட்டியில் முதலில் ஆடிய காலி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 175 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

அணி சார்பில் அதிகபட்சம் சகிட் அப்ரிடி 23 பந்தில் 58, தனுஸ்க குணதில 38 ஓட்டங்களை பெற்றனர். பந்துவீச்சில் டன்னி ஒலிவியர் 44 ஓட்டங்களுக்கு 4 வீழ்த்தினார்.

வெற்றியிலக்கை நோக்கி ஆடிய யாழ்ப்பாணம் அணி 19.3 ஓவர்களில் 2 விக்கெட்களை மட்டும் இழந்து 176 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

அணி சார்பில் அதிகட்சம் அவிஷ்க பெர்னாண்டோ 63 பந்தில் 92 ஓட்டங்களை பெற்றார். பந்துவீச்சில் மொஹமட் அமிர் 1 விக்கெட்டை வீழ்த்தினார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.