வௌவால்கள் இருப்பதால் ஆரோக்கியமாக உள்ளதாக நம்பும் கிராம மக்கள்!

 


தற்போது உலகை அச்சுறுத்தும் கொடிய கொரோனா வைரஸ் வௌவால்கள் மூலமாக பரவியதாக தெரிவிக்கப்படும் அதேவேளை வௌவால்கள் இருப்பதால்தான் தங்களது கிராமம் நோய்நொடியின்றி ஆரோக்கியமாக இருப்பதாக ஒரு கிராமத்தைச் சேர்ந்த மக்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டம், பாகலூர் அருகே கொளதாசபுரம் என்ற கிராம மக்களே இந்த நம்பிக்கையை கொண்டுள்ளனர்.

இந்தக் கிராமத்தில் 500 பேர் வசித்து வருகின்றனர். கிராமத்தின் மையப் பகுதியில் ஏரி ஒன்று அமைந்துள்ளது. இதன் கரையோரத்தில் மா மரங்கள் உள்ளன.

இதில் நூற்றுக்கணக்கான வௌவால்கள் வாழ்ந்து வருகின்றன. வௌவால்கள் இருப்பதால்தான் தங்களது கிராமம் நோய்நொடியின்றி ஆரோக்கியமாக இருப்பதாக கருதும் மக்கள், வெகுகாலமாக வௌவால்களை துன்புறுத்தாமல் நேசித்துக்கொண்டிருக்கிறார்கள். வௌவால்களும் கிராமத்திற்குள் சென்று மக்களுக்கு தொந்தரவு கொடுப்பதில்லை.

இப்படி மனிதர்களுக்கும்-வௌவால்களுக்கும் ஏற்பட்ட நெருக்கத்தின் பலனாக தீபாவளி நாட்களில் கொளதாசபுரம் கிராம மக்கள் வௌவால்களை பயமுறுத்தும் வகையில் பட்டாசு வெடிப்பதில்லை. மேலும் வௌவால்களுக்கு தொந்தரவு கொடுக்கக்கூடாது என்பதற்காக, மா மரங்களில் ஏறி மாங்கனிகளையும் பிடுங்குவதில்லை எனத் தெரிவிக்கின்றனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.