அன்டிஜென் பரிசோதனைக்கு அனுமதி!


 கொரோனா வைரஸ் நோயாளிகளை அடையாளம் காண்பதற்காக மேற்கொள்ளப்படும் துரித அன்டிஜென் பரிசோதனைகள் இலங்கையில் இன்றுமுதல் மேற்கொள்வதற்கு சுகாதார சேவைகள் பணிப்பாளரால் அனுமதி வழங்கக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இன்றுமுதல் தெரிவுசெய்யப்பட்ட குழுவினருக்கு அன்டிஜென் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். இந்தப் பரிசோதனைகளை பயிற்சியளிக்கப்பட்டவர்கள் மேற்கொள்ளவுள்ளனர் என்று தேசிய தொற்று நோயியல் பிரிவின் பிரதானி, விசேட மருத்துவர் சுதத் சமரவீர தெரிவித்தார்.

இந்தப் பரிசோதனையில், 20 தொடக்கம் 30 நிமிடங்களில் முடிவுகள் தெரியவரும் என சுதத் சமரவீர கூறியுள்ளார்.

இதேவேளை, உலக சுகாதார ஸ்தாபனம் ஒரு இலட்சம் துரித ஆன்டிஜென் பரிசோதனைக் கருவிகளை இலங்கைக்கு வழங்கியுள்ளது. அத்துடன், எதிர்வரும் வாரங்களில் மேலும் ஒரு இலட்சம் கருவிகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Blogger இயக்குவது.