முஸ்லிம்களின் உடல்கள் தொடர்பில் அரசு மீளாய்வு!


 கொரோனாவால் இறக்கும் முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பில் அரசு மீளாய்வு செய்கிறது என்று அமைச்சர்கள் பவித்ரா வன்னியாராச்சி, அலி சப்ரி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

இன்று (03) நாடாளுமன்றில் இதனை தெரிவித்தனர்.

முன்னதாக நாடாளுமன்றில் பேசிய சஜித் பிரேமதாச,

“கொரோனா தொற்றால் இறக்கும் முஸ்லிம்களின் உடல்களை எரிப்பது அடிப்படைவாத செயலாகும். முஸ்லிம்கள் நாட்டில் கொரோனாவை பரப்புகிறார்கள் என்று குற்றஞ்சாட்ட முயல்கிறார்கள். இது தவறானது. அரசு இந்த முடிவை மீள் பரிசீலனை செய்ய வேண்டும்.” என்று
தெரிவித்திருந்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.