அதிகரிக்கும் கொரோனா - ஜனாதிபதியின் அதிரடி தீர்மானங்கள்!!

 


நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் கொவிட் 19 தொற்றை ஒழிப்பதற்கான ஜனாதிபதி செயலணியின் உறுப்பினர்களுக்கு இடையில் இன்று கலந்துரையாடலில் பல அதிரடி தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.


அதன்படி கொரோனா பரவலை தடுப்பதற்காக மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்தை மட்டுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், அத்தியவசிய பொருட்கள் விநியோகம் மற்றும் ஏனைய அத்தியவசிய தேவைகள் தவிர்ந்த ஏனைய நடவடிக்கைகளுக்காக, மாவட்டங்களை விட்டு வெளியேற முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.


இதேவேளை, மக்களின் வாழ்வுக்கு பாதிப்பில்லாத வகையிலும், பொருளாதாரத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையிலும், கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு, இதன்போது ஜனாதிபதியினால் பல்வேறு தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


இதன்படி, ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில், கடந்த காலத்தைப் போன்று ஊரடங்கு அனுமதிப்பத்திரங்களை வழங்க வேண்டாம் என ஜனாதிபதி பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளார்.


எனினும், அரச நிறுவனங்கள், கூட்டுத்தாபனங்கள், சபைகள் மற்றும் அத்தியவசிய சேவையில் ஈடுபடுவோர் உள்ளிட்ட ஊடக நிறுவனங்களில் பணிபுரிவோர் தமது அலுவலக அடையாள அட்டையை ஊரடங்கு அனுமதிப்பத்திரமாக பயன்படுத்த முடியும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்


இதன்படி, 84 நிறுவனங்களுக்கு இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


இதேவேளை, மக்களை தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பாது, வீடுகளிலேயே சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தும் நடவடிக்கை வெற்றிகரமான பெறுபேற்றைத் தந்துள்ளதாக இதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.