டிரம்பையே நேரம் பார்த்து பழி தீர்க்கும் சிறுமி கிரேட்டா!!
சுவீடன் நாட்டைச் சேர்ந்த இளம் சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா துன்பர்க்(17). இவர் சுற்றுச்சூழல் விவகாரங்கைளைக் குறித்தும் மாறி வரும் தட்ப வெப்பநிலையைக் குறித்தும் கடந்த சில ஆண்டுகளாக பல உலக நாடுகள் மீது கடுமையான விமர்சனங்களை வைத்து வருகிறார். மேலும் இவர் உலகப் பொருளாதார மாநாடு உட்பட உலகின் பல முக்கிய கூட்டங்களில் கலந்து கொண்டும் பேசி வருகிறார். இந்தக் கூட்டங்களில் இவர் பேசும் கருத்துகள் எல்லாம் வளர்ந்து நாடுகளை பதம் பார்த்து விடுகிறது. இதனால் பல உலகத் தலைவர்கள் மறைமுகமாக கிரேட்டா மீது அதிருப்தியுடன் இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.
அந்த வகையில் கடந்த 11 மாதங்களுக்கு முன்பு சிறுமி கிரேட்டாவை பார்த்து டிரம்ப் என்ன சொன்னாரோ, அதே வார்த்தைகளை தற்போது கிரேட்டா, டிரம்ப்பை பார்த்து கூறி இருக்கிறார். அந்தக் கருத்துகள் தற்போது பலரையும் கவர்ந்து உள்ளது. டைம்ஸ் இதழ் கடந்த 2019 ஆம் ஆண்டு உலகின் சிறந்த நபராக கிரேட்டாவை தேர்ந்தெடுத்து விருது வழங்கியது. இந்த விருது குறித்து டிரம்ப்பிடம் கருத்துக் கேட்டபோது, அவர் கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். சிறிய வயதாக இருப்பதால் நண்பர்களுடன் சேர்ந்து நல்ல திரைப்படங்களைப் பார்க்கலாம். அது கோபத்தைக் கட்டுப்படுத்த ஒரு சிறந்த வழியாக இருக்கும் என தெரிவித்து இருந்தார்.
தற்போது உலகமே அமெரிக்க அதிபர் தேர்தலில் ஏற்பட்டு இருக்கும் சர்ச்சையை கூர்ந்து கவனித்து வருகிறது. இதில் ஆதாரமே இல்லாமல் அதிபர் டிரம்ப் வாக்கு எண்ணிக்கையை நிறுத்த வேண்டும் என்று டிவிட் செய்கிறார். நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கிறார். அந்த வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்தால் மீண்டும் சுப்ரீம் கோர்ட்டுக்கு செல்வேன் என்கிறார். மேலும் செய்தியாளர்களை சந்திக்கும்போது கடும் கோபத்தை வெளிப்படுத்தி வருகிறார். இந்தக் காட்சிகளை உலகமே பார்த்து வருகிறது.
இந்நிலையில் “இது அபத்தமானது. டிரம்ப் தனது கோபத்தை எப்படி கையாள்வது என கற்றுக் கொள்ள வேண்டும். அவர் தனது நண்பருடன் இணைந்து பழைய படம் ஒன்றை பார்க்க வேண்டும். பொறுமையாக இருங்கள் டொனால்ட்” என தனது டிவிட்டர் பக்கத்தில் கிரேட்டா கருத்துத் தெரிவித்து இருக்கிறா. இந்த டிவிட்டைப் பார்த்த பலரும் கிரேட்டா, நல்ல நேரம் பார்த்து பழி தீர்த்துக் கொள்கிறார் என விமர்சித்து வருகின்றனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை