ஹரிஷ் கல்யாண் - வைரலாகும் சிக்ஸ்பேக் ஸ்டில்!

 


பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களின் மத்தியில் மனம் கவர்ந்தவர் ஹரிஷ் கல்யாண் என்பது தெரிந்ததே. ஹரிஷ் கல்யாண் தான் டைட்டில் பட்டம் வெல்வார் என எதிர்பார்த்தேன் என சமீபத்தில் சுரேஷ் சக்கரவர்த்தி பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் பிக்பாஸ் முதல் சீசனில் இறுதி வரை ஹரிஷ் கல்யாண் அந்த நிகழ்ச்சியில் இருந்தார் என்பதும் நூலிழையில் தான் டைட்டில் பட்டத்தை மிஸ் செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் அதிக திரைப்பட வாய்ப்புகள் பெற்ற மிகச்சிலரில் ஹரிஷ் கல்யாண் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக அவர் நடித்த ’பியார் பிரேமா காதல்’ ’தாராள பிரபு’ ஆகிய படங்கள் சூப்பர் ஹிட்டாகின என்பதும் தெலுங்கிலும் அவரது படங்கள் ஹிட்டாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் தற்போது ’கசடதபற’ மற்றும் ’ஓமணப்பெண்ணே’ ஆகிய இரண்டு தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பதும், இவற்றில் ’ஓமணப்பெண்ணே’ திரைப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


இந்த நிலையில் தற்போது ஹரிஷ் கல்யாண் தனது சமூக வலைத்தளத்தில் அட்டகாசமான சிக்ஸ்பேக் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். உடற்பயிற்சி கூடத்தில் உட்கார்ந்து இருக்கும் இந்த அட்டகாசமான புகைப்படத்திற்கு அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ரொமான்ஸ் நாயகனாக வலம் வந்து கொண்டிருந்த ஹரிஷ் கல்யாண் தற்போது ஆக்சன் படம் ஒன்றில் நடிக்கவிருப்பதாகவும் அதற்காகத்தான் இந்த சிக்ஸ்பேக் என்றும் கூறப்படுகிறது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.