லட்சுமி பாம் - புதிய டைட்டில் மற்றும் ரிலீஸ் தேதி அறிவிப்பு!!

 


ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் அக்ஷய்குமார் நடிப்பில் உருவாகிய ’லட்சுமி பாம்’ என்ற திரைப்படம் சமீபத்தில் ரிலீசுக்கு தயாரான நிலையில், இந்த படத்தின் டைட்டிலுக்கு எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து இந்த படத்தின் டைட்டில் மாற்றப்பட உள்ளதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.


இது குறித்து சென்சார் குழுவினரிடம் அனுமதி பெற்று முறையான அறிவிப்பு வெளிவரும் என்றும் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் தரப்பிலிருந்து தகவல்கள் வெளிவந்தன. இந்த நிலையில் சற்று முன் ராகவா லாரன்ஸ் தனது சமூக வலைத்தளத்தில் ’லட்சுமி பாம்’ என்ற திரைப்படத்தின் புதிய டைட்டில் ’லட்சுமி’ என்று அறிவித்துள்ளார். மேலும் ஏற்கனவே அறிவித்தபடி நவம்பர் 9ம் தேதி தீபாவளி விருந்தாக இந்த படம் ஓடிடியில் வெளியாகும் என்பதையும் அவர் உறுதி செய்துள்ளார். புதிய டைட்டிலில் புதிய போஸ்டரையும் ராகவா லாரன்ஸ் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


தமிழில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற ’காஞ்சனா’ திரை படத்தின் இந்தி ரீமேக்கான இந்த படத்தில் அக்ஷய்குமார், கைரா அத்வானி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படம் தமிழைப் போலவே பாலிவுட்டிலும் சூப்பர் ஹிட்டாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.