உலக சுகாதார அமைப்பின் தலைவர் சுயதனிமைப்படுத்தலில்!!
உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானம் கப்ரியேசுஸ் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்பட்டுள்ளதாகவும், வீட்டிலிருந்தே தனது பணிகளை மேற்கொள்வதாகவும் அறிவித்துள்ளார்.
தன்னுடன் தொடர்பினைப் பேணிய ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டமையினைத் தொடர்ந்து அவர் இவ்வாறு சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
குறித்த விடயம் தொடர்பாக தனது உத்தியோகபூர்வ சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள அவர், தான் அறிகுறிகள் ஏதுமற்று உள்ள அதேவேளை நலமுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரிவித்துள்ள அவர், நாம் அனைவரும் சுகாதார கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு இணங்கி நடக்க வேண்டியது அவசியம் என வலியுறுத்தியுள்ளார்.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உலகின் பல்வேறு நாடுகளின் அரசியல் மற்றும் சமூகத் தலைவர்கள் ஏற்கனவே பாதிப்பிற்குள்ளாகிய நிலையில் உலக சுகாதார அமைப்பின் தலைவருக்கு ஏற்பட்டுள்ள குறித்த நெருக்கடியானது பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை