2 பிரபல இயக்குனர்கள் பேரறிவாளன் விடுதலைக்காக குரல் கொடுத்தனர்!!

 


முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கி கடந்த 30 ஆண்டுகளாக சிறையில் இருந்து வரும் பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும் என கடந்த பல ஆண்டுகளாக பேரறிவாளனின் தாயார் சட்டப்போராட்டம் நடத்தி வருகிறார்


இந்த நிலையில் தமிழ் திரையுலகின் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் மற்றும் பார்த்திபன் ஆகியோர் தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் பேரறிவாளன் விடுதலை குறித்த பதிவை செய்துள்ளனர். குற்றம் செய்யாத ஒருவருக்கு 30 வருட சிறை தண்டனை, அந்த மகனை விடுவிக்க ஒரு தாயின் 30 வருட போராட்டம். இதனை மனதில் கொண்டு பேரறிவாளனை விடுதலை செய்ய தமிழக முதல்வர் மற்றும் தமிழக கவர்னர் ஆகியோர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் பதிவு செய்துள்ளார்


அதேபோல் இயக்குனர் பார்த்திபன் தனது டுவிட்டரில் கூறியதாவது: அற்புதம் அம்மாள் நீதித்துறையின் பொற்பாதம் பிடிக்காதக் குறையாக கடந்த வருடங்களில் அவர் நடந்த தூரமும், துயரமும் அளவிட முடியாதது. விடுதலையில் நியாயமும் தர்மமும் இருப்பதால், அது உடனடியாக நிகழ வேண்டி போராடும் நல்லிதயங்களில் நானும் ஒருவன்’ என்று பதிவு செய்துள்ளார்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.