நான்.....என் காதல்..!!
என் ஞாபகக்காடுகளெங்கும்
உதிர்ந்துக்கிடக்கிறது என் காதல்.
காய்ந்த கிளைகளெங்கிலும்
பூத்திருக்கின்றன
கண்ணீர்ப்பூக்கள்.
பூக்களை தேடித்தேடி
சோர்ந்து ஏமாந்து செல்கிறது
ஒரு பட்டாம்பூச்சி.
கிளைகள் காய்ந்திருந்தாலும்
வேறுக்குள்
கசிந்துகொண்டுதான் இருக்கிறன
காதல் துளிகள்.
என்னை பொருத்தவரையில்
வசந்தமென்பது
வெறும் கனவாகிப்போனவொன்று....
உன்னைப்பொருத்தவரையில்
உனக்கு நான்
என்றோ தூக்கி எறிந்த
கைக்குட்டைதானே
கண்ணம்மா?
நட்சத்திரப்பாடகன்
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை