பேரன் உயிரிழந்த செய்தி கேட்டு பாட்டி மரணம்!!
யாழில் பேரன் உயிரிழந்த செய்தி கேட்டு அவரது அம்மம்மாவான வயோதிப் பெண்ணும் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் இன்று காலை யாழ்ப்பாணம், உடுவில் ஆலடியில் இடம்பெற்றுள்ளது.
30 வயதுடைய இளம் குடும்பஸ்தரரும் அவரது அம்மம்மாவான 70 வயது பெண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
குறித்த இளம் குடும்பஸ்தரை அவரது மனைவி இன்று அதிகாலை தூக்கத்திலிருந்து எழுப்பியபோது அவர் சுயநினைவற்ற நிலையில் இருப்பதை அறிந்து உடனடியாக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றனர்.
எனினும் அவர் அங்கு உயிரிழந்துள்ளார். இந்நிலையில் அந்தச் செய்தியை கேள்வியுற்ற அதிர்ச்சியில் அவரின் அம்மம்மா மயங்கி விழுந்த நிலையில், வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில் அவரும் உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து சம்பவம் தொடர்பில் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் இறப்பு விசாரணைகளை முன்னெடுத்த நிலையில், சடலங்கள் உடகூற்றுப் பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.
மேலும் இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை