அனைத்து பொலிஸ் நிலையங்களுக்குமான உத்தரவு!

 


எதிர்வரும் திங்கட்கிழமைக்கு முன்னர் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள போதைப் பொருளுக்கு அடிமையானவர்களுக்கு எதிான வழக்குகளை பதிவு செய்யுமாறு அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் பொலிஸ் தலைமையகம் அறிவுறுத்தியுள்ளது.

பொலிஸ் செய்தித் தொடர்பாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன, போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு எதிரான வழக்குகளை விரைவுபடுத்துவது தொடர்பாக நாட்டின் அனைத்து 44 பொலிஸ் பிரிவுகளின் பொலிஸ் பொறுப்பதிகாரிகள் மற்றும் பிற பிரதேச மூத்த அதிகாரிகளுடன் இன்றையதினம் வீடியோ இணைப்பு மூலம் சிறப்பு கூட்டம் நடத்தப்பட்டதாகத் தெரிவித்தார்.

இதன்போது போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கு எதிர்வரும் திங்கள்கிழமைக்குள் உடனடியாக வழக்குத் தொடர அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சிறைகளில் நெரிசலைக் குறைக்கும் வகையில் சட்டமா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Blogger இயக்குவது.