வல்வெட்டித்துறையில் குடும்பங்கள் இடம்பெயர்வு!


 வல்வெட்டித்துறை ஆதிகோவிலை அண்மித்த பகுதியில் புரேவி புயல் காரணமாக இன்று (02) இரவு 10 மணியளவில் வீசிய கடும் காற்றால் நால்வர் காயமடைந்துள்ளனர்.

சிறுமி உட்பட்ட நால்வர் காயமடைந்த நிலையில் மூவர் வல்வெட்டித்துறை ஊறணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை இந்த காற்றினால் பாதிக்கப்பட்டு 50 குடும்பங்கள் அங்கிருந்து வெளியேறி ஆலயம் ஒன்றில் தஞ்சமடைந்துள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.