ட்ரம்ப் வெளியிட்ட சபதம்!

 


அடுத்த நான்கு ஆண்டுகள் கழித்து மீளவும்சந்திப்போம் என வெள்ளை மாளிகையில் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் கிறிஸ்மஸ் விருந்து நேற்று (டிசம்பர் 1) நடைபெற்றது. இதில் பல்வேறு விருந்தினர்கள் பங்கேற்றனர்.

இந்த விருந்தின்போது பேசிய ட்ரம்ப், “கடந்த நான்கு ஆண்டுகள் சிறப்பாக இருந்தது. மீண்டும் நான்கு ஆண்டுகள் ஆட்சி அமைக்க முயற்சித்து வருகிறோம். முடியாவிட்டால், நான்கு ஆண்டுகள் கழித்து மீண்டும் சந்திக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் ஊடகங்கள் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை. ஆனால், ட்ரம்ப் பேசிய வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

Blogger இயக்குவது.