யாழ்ப்பாணத்துக்கு மட்டும் விஜயம் செய்யும் அமைச்சர்கள்!


 அமைச்சர்களும் இராஜாங்க அமைச்சர்களும் யாழ்ப்பாணத்திற்கு மாத்திரம் விஜயம் செய்யாது வன்னி, முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களுக்கும் விஜயம் செய்ய வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற 2021ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சுகள் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

மன்னார் மாவட்டத்திலுள்ள மீனவர்கள் தமது மீன்களை விற்பனை செய்வதற்கான நவீன சந்தையொன்று அமைக்கப்பட வேண்டும்.

மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் தீயணைப்பு படைகள் இல்லாதுள்ளன. அண்மையில் இடம்பெற்ற ஒரு தீ விபத்தை அணைக்க மன்னார் மாவட்டத்திலிருந்துதான் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு சென்றுள்ளனர்.

இவ்வாறு தீ விபத்துகள் ஏற்படும் சந்தர்ப்பங்களில் அவற்றை கட்டுப்படுத்த அந்த அந்த மாவட்டங்களிலேயே தீயணைப்பு படைகள் உருவாக்கப்பட வேண்டும்.

உடனடியாக செய்யப்பட வேண்டிய விடயமாக இது உள்ளதால் நகர அபிவிருத்தி அமைச்சு இதற்கு நடவடிக்கையெடுக்க வேண்டும்.

நகர அபிவிருத்தி திட்டத்தின் கீழ் யுத்தத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள முல்லைத்தீவு நகரத்தை அபிவிருத்தி செய்ய வேண்டும்.

நகர அபிவிருத்தி முல்லைத்தீவு பூச்சியமாக உள்ளது. அதேபோன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் வெளிச்ச வீடு ஒன்றை அமைக்க வேண்டும்.

ஆகவே, நகர அபிவிருத்தியில் முல்லைத்தீவு, வன்னி மற்றும் மன்னார் மாவட்டங்கள் தொடர்பில் அதிகூடிய கவனம் செலுத்தப்பட வேண்டும். என்றார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.