பசிலுக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத்தடை!


 தொம்பேவில் உள்ள ஒரு சொத்து தொடர்பாக முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷக்கு விதிக்கப்பட்ட சர்வதேச பயண தடையை நீக்கியது நீதிமன்று.

சொத்து தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, ​​கம்பகா உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் விதிக்கப்பட்ட பயணத் தடை நீக்கப்பட்டது.

சட்டமா அதிபர் பண மோசடி சட்டத்தின் கீழ் இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தார்.

தொம்பேவில் உள்ள மல்வானவில் 16 ஏக்கர் நிலம் தனக்கு சொந்தமானது, என்றும் அங்கு மாளிகை, நீச்சல் குளம் மற்றும் பண்ணை ஆகியவற்றைக் கட்டியதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டை பசில் ராஜபக்ஷ மறுத்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.