விவசாயி ஒருவரின் வீட்டில் முளைத்த இராட்சத மழை காளான்!
கிளிநொச்சி - பாரதிபுத்தில் உள்ள விவசாயி ஒருவரின் வீட்டில் 3.5 கிலோ எடையுடைய மழை காளான் முளைத்துள்ளது.
இக் காளானை அந்த விவசாயி அறுவடை செய்துள்ளார்.
மாரிமுத்து ஆறுமுகம் என்ற விவசாயியின் வீட்டிலேயே இந்த மழைக் காளான் முளைத்துள்ளது.
காளானை உணவுக்காக பயன்படுத்துவதாகவும், இதில் ஓர்வகை பூச்சி தாக்கம் உள்ளதால் உணவுக்கு பயன்படுத்தாது பார்வைக்காக கடையில் வைத்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.
இதேவேளை இக் காளான், விவசாய ஆராச்சிக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இரணைமடு சந்தியில் அமைந்துள்ள விவசாய ஆராய்ச்சி நிலையத்துக்கு எடுத்து செல்லப்பட்டது.
விவசாய ஆராய்ச்சி உதவி ஆணையாளர் கலாநிதி அரசகேசரி விவசாயியின் வீட்டுக்கு சென்று பார்வையிட்டதுடன், விவசாய ஆராய்ச்சிக்காக அதனை எடுத்து சென்றுள்ளார்.
கருத்துகள் இல்லை