வெளியில் செல்ல வேண்டாம்!
நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமையின் மத்தியில் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்குச் செல்வதையோ, செல்பி எடுப்பதையோ தவிர்த்துக்கொள்ளுமாறு, அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
புயல் காற்றுடனான பலத்த மழையால், அவசர வெள்ள நிலைமை ஏற்படுமாயின் அந்த இடங்களில் நீர் வீளையாட்டுகளில் ஈடுபடுதல், சிறியளவு படகுகளை செலுத்துதல் என்பவற்றிலும் ஈடுபட வேண்டாமென பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் ஓய்வுப்பெற்ற மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன், திடீர் அனர்த்தங்களுக்கு முகங்கொடுப்பதற்காக சகல மாவட்ட அதிபர்களுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் இதற்காக முதற்கட்டமாக தலா ஒரு மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை