திருணம் செய்து வைப்பதாக கூறி அழைத்துச் சென்றுகொன்ற குடும்பத்தினர்!


 திருணம் செய்து வைப்பதாக கூறி இளைஞரை அழைத்துச் சென்ற பெண்ணின் பெற்றோர் அவரை கொலை செய்துள்ளமை பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் கர்நாடகா மாநிலம் ராம்நகர் மாவட்டத்தில் வசிக்கும் பசவன்ஹள்ளியைச் சேர்ந்த கே.லட்சுமிபதி (24) என்ற இளைஞர் இஸ்லாம்புராவைச் சேர்ந்த நிஜாமுதீன் என்பவரின் மகளை காதலித்து வந்தார். எனினும் இவர்களின் காதலுக்கு இருவீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்தனர்,

இதனையடுத்து காதலர்கள் இருவரும் வீட்டைவிட்டு ஓடிய நிலையில், அவர்கள் இருக்கும் இடத்தை கண்டுபிடித்த பெண்ணின் தந்தை திருமணம் செய்து வைப்பதாக கூறி அழைத்துச் சென்றார்.

பின்னர் நிஜாமுதீனும் சிலரும் திருமணம் பற்றி பேச வேண்டும் எனக்கூறி லட்சுமிபதியை தனியாக அழைத்துச் சென்று தனியான இடத்தில் வைத்து லட்சுமிபதியை கொலை செய்துள்ளனர்.

கொலை குறித்து லட்சுமிபதியின் சகோதரர் பொலிஸாருக்கு தகவல் அளித்ததையடுத்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டு நிஜாமுதீன் மற்றும் அவரது நண்பர்களை கைது செய்தனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.