வவுனியாவில் 22வயது இளைஞனுக்கு கொரோனா!


 வவுனியா கல்மடு ஈஸ்வரிபுரம் கிராமத்தை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

வவுனியா கல்மடு ஈஸ்வரிபுரத்தை சேர்ந்த 22 வயதான குறித்த இளைஞன் கொழும்பில் உள்ள பிரபல நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் 14 நாட்கள் குறித்த இளைஞன் தனிமைப்படுத்தப்பட்டு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு கொரோனா தொற்று பீடிக்கவில்லை என்று உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே வவுனியாவில் உள்ள தனது வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 22ம் திகதி வவுனியா கல்மடு ஈஸ்வரிபுரத்தில் உள்ள தனது வீட்டிற்கு சென்ற இளைஞனை 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 2ம் திகதி பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இப்பரிசோதனை பிரகாரம் குறித்த இளைஞனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து நேற்று இரவு கிளிநொச்சி தனிமைப்படுத்தல் மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.